காங்கிரஸ் டூல்கிட் தொடர்பாக ட்விட்டர் அலுவலத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கிய நிலையில், இந்தியாவில் உள்ள தங்களது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களுடைய சேவையை தடுக்க காவல்துறையினர் மிரட்டலை பயன்படுத்துவது குறித்து கவலை கொள்வதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
தாங்கள் சேவையளிக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கருதுவதாக அந்நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கோவிட் தொற்றை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து அவதூறு பரப்ப காங்கிரஸ் கட்சி ஒரு டூல்கிட்டை உருவாக்கி இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி ஆவணங்களை ட்விட்டரில் வெளியிட்டது.
இந்த ஆவணங்கள் போலியானவை என காங்கிரஸ் கட்சி ட்விட்டரிடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து இந்த ஆவணங்கள் மாற்றப்பட்டவை என சிலவற்றை ட்விட்டர் தனது பயனர்களுக்கு குறிப்பிட்டு காட்டியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவன அலுவலகத்திற்கு சென்று காவல்துறையினர் நோட்டீஸ் அளித்தனர்.