கேரளாவில் வெளவால்களால் நிபா வைரஸ் பரவிய நிலையில், நீலகிரி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் உள்ள எருமாடு பகுதியில் முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான வெளவால்களால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அப்பகுதியின் கடைத்தெருவை ஒட்டியுள்ள யூகலிப்டஸ் மரங்களை வாழ்விடமாகக் கொண்ட வெளவால்கள், இரவு நேரங்களில் உணவு தேடி ஊருக்குள் சுற்றித்திரிந்துவிட்டு காலையில் மீண்டும் அதே மரங்களுக்குத் திரும்பிவிடுகின்றன. இந்நிலையில் கேரளாவில் வெளவால்களால் நிபா வைரஸ் பரவியது கண்டறியபட்டதால், வெளவால்கள் கடித்த பழங்களை உட்கொள்ள வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.