2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் இந்திய ரயில்வேக்கு அடுத்த ஓராண்டுக்கான திட்டத்தையும், புதிய ரயில்வே பணிகள் குறித்தும் பேசினார்.
ரயில்வே பட்ஜெட் குறித்த சில அறிவிப்புகள்:
விவசாயிகளின் விளைபொருள்களை கொண்டு செல்ல உருவாக்கப்படும் கிஷான் ரயில், குளிர்பதன வசதி கொண்டதாக இருக்கும்
மும்பை - அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள ரயில்வே வழித்தடங்கள் குறிப்பாக ரயில் நிலையங்களில் சோலார் வசதி செய்து தரப்படும்.
ரயில்வேயில் தனியாரின் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதமாக அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 150 தனியார் ரயில்களை இயக்க வழி வகை செய்யப்படும்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும் வருமானத்தை பெருக்குவதற்காகவும் அதிகளவிலான தேஜாஸ் வகையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
சதாப்தி வகையிலான உட்காரும் வசதி கொண்ட ஏசி ரயில்களும் நாடு முழுவதும் இயக்கப்படும்.
நாடுமுழுவதும் உள்ள ஆயிரம் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும்.
பெங்களூர் நகரில் புறநககர் ரயில் வசதி ஏற்படுத்தி தரப்படும். மெட்ரோ பாணியில் தனியாருடன் இணைந்து சுமார் ரூ18000 கோடி செலவில் புறநகர் ரயில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும்