6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு!

6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு!
6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு!
Published on

டெல்லி, கேரளா, உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து ரயில்களில் மகாராஷ்டிராவிற்கு வருவோர், கொரோனா தொற்று இல்லையென சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, கோவா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களை தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதியாக அறிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் இருந்து தங்கள் மாநிலத்திற்கு ரயில்களில் வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா விதித்துள்ளது.

அதன்படி, இந்த 6 மாநிலங்களில் இருந்து வருவோர், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதில் கொரோனா தொற்று இல்லையென முடிவு வந்ததற்கான சான்றிதழ் அளித்தால் மட்டுமே மகாராஷ்டிராவிற்குள் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்யாமல், வருவோருக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com