குஜராத் தீ விபத்தில் உயிரை பணயம் வைத்து இருவரை காப்பாற்றிய இளைஞர்: குவியும் பாராட்டு

குஜராத் தீ விபத்தில் உயிரை பணயம் வைத்து இருவரை காப்பாற்றிய இளைஞர்: குவியும் பாராட்டு
குஜராத் தீ விபத்தில் உயிரை பணயம் வைத்து இருவரை காப்பாற்றிய இளைஞர்: குவியும் பாராட்டு
Published on

குஜராத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவி‌பத்தின் போது தன் உயிரை பணயம் வைத்து இரண்டு பெண்களை காப்பாற்றிய இளைஞருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன

குஜராத் மாநி‌லம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தக்கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் டுடோரியல் பயிற்சி பள்ளியிலும் தீ மளமளவென பரவியது. பள்ளியிலிருந்த 1 ஆசிரி‌யர் உள்பட‌ 20 பேர்‌ தீயில் கருகி உயிரிழந்தனர். இரண்டாம் தளத்தில் இருந்து கீழே இறங்க வழி இல்லாததால் மாடியிலிருந்து சன்னல் வழியாக தரை‌ நோக்கி மாணவர்கள் குதித்து உயிர் தப்பினர்.

இந்த விபத்தின் போது கேடன் ஜோரவத்யா என்ற இளைஞர் தன் உயிரை பணயம் வைத்து இரண்டு பெண்களை காப்பாற்றியுள்ளார். அவர் காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கட்டடத்தின் பக்கவாட்டில் நிற்கும் கேடன் மேலிருந்து குதிக்கும் பெண்களுக்கு உதவி செய்து பத்திரமாக கீழே இறக்குகிறார். கடுமையான அனல் அருகே நின்றுகொண்டு பெண்களை காப்பாற்றிய கேடனை நிஜ ஹீரோ என்று வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, தீவிபத்தில் இறந்த நபர்களுக்கு தலா‌ 4 லட்சம் ரூபாய் இழப்பீடு‌ வழங்கப்படுமென‌, அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com