இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் ஆஸ்திரேலியாவிலிருந்து வெற்றி வாகை சூடி ஊர் திரும்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்து புகழ்ந்துள்ளார். இதை ட்விட்டர் மூலமாக தெரிவித்த்துள்ளார் ஷேவாக் என்பது குறிப்பிடத்தக்கது.
“இது தான் இந்தியா! இங்கே கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல. எங்களுக்கு கிரிக்கெட் அதுக்கும் மேல. நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் பெருத்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. என்ன ஒரு அற்புதமான கதை அவருடையது” என ஷேவாக் அதற்கு கேப்ஷன் போட்டுள்ளார். கூடவே நடராஜன் சாரட் வண்டியில் வலம் வரும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.