தடுமாறி விழுந்ததை சமாளிக்கவே இந்த வட்டி அதிகரிப்பு! - வாசகர்களின் கமெண்ட்ஸ்

தடுமாறி விழுந்ததை சமாளிக்கவே இந்த வட்டி அதிகரிப்பு! - வாசகர்களின் கமெண்ட்ஸ்
தடுமாறி விழுந்ததை சமாளிக்கவே இந்த வட்டி அதிகரிப்பு! - வாசகர்களின் கமெண்ட்ஸ்
Published on

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 8-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, 'மறுபடியும் அதிகரித்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்... பொருளாதாரத்தில் இந்தியா தடுமாறுகிறதா? சமாளிக்கிறதா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

rdsaravanaperumal

சாமானிய மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் துவங்கி இன்றைய நாள் முதல் தொடர்கிறது! இதற்கான தீர்வுகள் ராமர் துவங்கி இப்போது நபிகள் நாயகத்தில் வந்து நிற்கிறது!

Rainbow Times

பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பு சரியாக வேண்டுமென்றால், ஒன்று அவர்களது பொருளாதார கோட்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையென்றால் அவர்கள் அதிகாரத்திலிருந்து நீங்க வேண்டும்! நாட்டின் அடிப்படைப் பொருளாதாரத்தின் சூத்திரமறியாதவர்களை அதிகாரத்தில் வைத்தால் இப்படித்தான் ஆகும்!

gnana pradeesh

சர்வதேச ரீதியில் முன்னேற்ற பாதையில் செல்கிறது. ஆனால் உள்நாட்டு ரீதியில் மக்கள் தான் பின்னோக்கி தள்ளப்படுகிறார்கள்..

ஆறு மாதத்தில் இரண்டாவது தடவை, எத்தனை தடவை ஏத்துவாங்க வட்டிய..

Kumar Gandhi

தடுமாறி விழுந்ததை சமாளிக்க இந்த வட்டி அதிகரிப்பு.

பொருளாதாரத்தை சமாளிக்கிறேனு சொல்லி வட்டி விகிதத்தை ஏத்தி விட்டுட்டாங்க இது எங்க போயி முடிய போதோ..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com