டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைப்போல மத்திய பிரதேசத்தில் ஒருவர் இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் ஒருவர் நின்றுகொண்டு சாட் உணவுப் பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறார். அவரை கடந்து செல்லும் யாரும் ஒரு நிமிடம் நின்று அவரை உற்று நோக்கிவிட்டுத்தான் செல்வார்கள். நாம் பார்த்தாலுமே 'டெல்லி முதலமைச்சர் இங்க என்ன பண்றாரு' என குழம்பும் வகையில், கண்ணாடி அணிந்துகொண்டு கெஜ்ரிவாலை பிரதியெடுத்தார் போல் இருக்கிறார் அந்த கடைக்காரர்.
இது தொடர்பாக யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. 'Dil Se Foodie'என்ற யூடியூப் சேனலை நிர்வகிக்கும் கரன் என்பவர் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். 2லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களையும், 9,000க்கும் மேலான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான கமெண்டுகளையும் அந்த வீடியோ பெற்றிருக்கிறது.
மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள அந்த கடையின் பெயர் குப்தா சாட். கச்சோடி, சமோசா, தயிர் வடை, பாப்படி சாட் உள்ளிட்ட வகை வகையான உணவுப்பொருட்கள் அந்த கடையில் விற்க்கப்பட்டு வருகின்றன. அந்த கடையில் சாப்பிட வரும் பலரும் அவரிடம், 'நீங்கள் அரவிந்த் கெஜ்ரிவால்' போல இருக்கிறீர்கள் என்று கூறிச்செல்கின்றனர். சிலர், 'குளிர்காலத்தில் மஃப்ளர் ஒன்றை அணிந்தால் அப்படியே கெஜ்ரிவால்' தான் என்றும் கூறுகின்றனர். 'கெஜ்ரிவால் ஒருமுறையாவது இவரை நேரில் பார்க்க வேண்டும்' என்று சிலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
வீடியோவைக்காண இங்கே க்ளிக் செய்யவும் - https://www.youtube.com/watch?v=G4g17Gh3XFk