மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுக்கப்பட்டதா.. இல்லையா.. நடந்தது என்ன? : திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கை

செங்கோல் தொடர்பாக சில ஊடகங்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக திருவாவடுதுறை ஆதீன தலைவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கை
திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கைதிருவாவடுதுறை ஆதீனம்
Published on

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா டெல்லியில் கடந்த மாதம் 28ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திறப்பு விழாவின்போது பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை நிறுவினார்.

செங்கோலை வைத்த பின்னர் ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, ”செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி. செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகார மாற்றத்துக்கான அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசியிடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. செங்கோல் என்பது கடமையின் பாதையில் செல்லவேண்டும் என்பதற்கான அடையாளம்.

ராஜாஜி மற்றும் ஆதீனத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது. 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டது. மக்களவையில் புனிதமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோலுக்கு வரலாறு உண்டு. எப்போது விவாதம் நடந்தாலும், இச்செங்கோல் நமக்கு நியாயத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, செங்கோல் தொடர்பாக சில வரலாற்றுத் தகவல்கள் விவாதிக்கப்பட்டன. அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கைகளில் மவுண்ட் பேட்டன் பிரபு மூலமாக செங்கோல் அளித்ததாகக் கூறப்பட்டது. அதாவது அதிகாரம் மாற்றப்பட்டதை வெளிப்படுத்தும் விதமாக ஆதீனங்கள் தரப்பில் செங்கோல் மவுண்ட்பேட்டன் இடம் கொடுக்கப்பட்டு அவரிடம் இருந்து நேருவிற்கு சென்றதாக பேசப்பட்டது.

”ஆனால், அதிகார மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை” என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்யத் தொடங்கினர். அதாவது, மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு செங்கோல் தரப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்று குற்றஞ்சாட்டினர்.

இந்த நிலையில், "சுதந்திரத்தின்போது ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பாக வைஸியராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் கொடுக்கப்பட்டதா என்று தெளிவாகத் தெரியவில்லை. அனைத்து அதிகாரங்களையும் இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்ட பின்னர் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் கொடுப்பதால் என்ன பயன்” என திருவாவடுதுறை ஆதீன தலைவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்திருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தச் செய்தி வெளியான நிலையில், அதற்கு ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது பற்றித் தெளியவான தகவல் இல்லை என்று திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் கூறியதாகச் செய்தி அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இவ்வறிக்கை வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதாகும். உண்மைகளைத் திரித்து விஷமத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “ஊடகங்களின் ஒரு சாரார், ஆதீனத்திற்குக் குறையேற்படும்படியான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது, திருவாவடுதுறை ஆதீனகர்த்தரை மிகவும் புண்படுத்துகிறது.

அம்பலவாண சுவாமி அறிக்கை
அம்பலவாண சுவாமி அறிக்கைஅம்பலவாண தேசிக சுவாமிகள்

மவுண்ட்பேட்டன் செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற இல்லாமைக்குக் காரணம், ஆதீனக் குழுவினர் புகைப்படக் கருவிகளோடு செல்லவில்லை. செங்கோலை வழங்க வேண்டிய இடத்தில் முறையாக வழங்கி, மங்கல நாதமும் திருமுறைத் தமிழும் ஒலிக்க அளித்து, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை முறையாக இக்குழுவினர் செய்து நிறைவேற்றினார்கள்; திரும்ப வந்து ஆதீனகர்த்தரிடம் செய்தியைத் தெரிவித்தார்கள். இவையெல்லாம் தொடர்ந்து வந்த காலங்களில், பல இடங்களில், ஊடகங்கள் உட்பட பதிவு செய்யப்பட்டுள்ளன” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலவாண சுவாமி அறிக்கை
அம்பலவாண சுவாமி அறிக்கைஅம்பலவாண தேசிக சுவாமிகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com