மோடியின் 3வது ஆட்சி| முதல் 100 நாட்களின் சாதனைகளை பட்டியலிட்ட அமித்ஷா.. விமர்சித்த காங்கிரஸ்!

3ஆவது முறையாக மோடி தலைமையில் அமைந்துள்ள அரசு முதல் 100 நாட்களில் சாதித்தவற்றை உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியலிட்டுள்ளார். அதே நேரம் மோடியின் தற்போதைய அரசு பலவீனமானது என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளது காங்கிரஸ்.
சுப்ரியா ஸ்ரீநாத், பிரதமர் மோடி, அமித்ஷா
சுப்ரியா ஸ்ரீநாத், பிரதமர் மோடி, அமித்ஷாpt web
Published on

சாதனைகளை பட்டியலிட்ட அமித்ஷா

பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மோடி அரசின் முதல் 100 நாள் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுPT வலை

பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 30 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 28 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் 12 தொழிற்சாலை வழித்தட திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்ற நிலையை தங்கள் அரசு ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அமித்ஷா, அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

சுப்ரியா ஸ்ரீநாத், பிரதமர் மோடி, அமித்ஷா
”பணியின் உணவு இடைவேளையில் கூட உடலுறவு கொள்ளலாம்..” - ரஷ்ய அரசு பிறப்பித்த உத்தரவின் பின்னணி என்ன?

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு வழங்க உள்ளதாக குறிப்பிட்ட அமித் ஷா தொழிற் தொடங்குவோருக்கான முத்ரா கடன் வரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் ஆக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பு நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி தந்ததாக குறிப்பிட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மோடியின் 3ஆம் ஆட்சிக்காலத்திலேயே செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ்

முதல் 100 நாள் சாதனைகளை அமித் ஷா பட்டியலிட்ட நிலையில் இந்த அரசு மிக பலவீனமானது என கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ்.

அரசு ஊழியர்களின் கடும் எதிர்ப்பால் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது என குறிப்பிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், மத்திய அரசின் இணைச்செயலாளர் பணிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் அறிவிப்பு ரத்து, வக்ஃப் மசேதா ஆய்வுக்கு அனுப்பப்பட்டது, சொத்து விற்பவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்யும் பட்ஜெட் அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது உள்ளிட்டவற்றையும் சுட்டிக்காட்டினார்.

சுப்ரியா ஸ்ரீநாத், பிரதமர் மோடி, அமித்ஷா
திமுக முப்பெரும் விழா| AI தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி - வியந்துபார்த்த தொண்டர்கள்!

100 நாட்களில் 38 ரயில் விபத்துகள் நடந்ததாகவும், காஷ்மீரில் 26 முறை பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்ததாகவும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மணிப்பூரில் கலவரங்கள் மேலும் அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நாடாளுமன்ற கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவதிலிருந்து சிவாஜி சிலை உடைந்து விழுந்தது, அடல் பாலம் விரிசல் விட்டது வரை கட்டுமான திட்டங்களின் பலவீனங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com