’அவசரம்!’ காரை திருடிவிட்டு மனம்கேட்காமல் மன்னிப்பு கடிதத்துடன் நடுரோட்டில் நிறுத்திச்சென்ற திருடன்!

டெல்லியிலிருந்து காரை திருடி விட்டு மனம் கேட்காமல்,அதை ராஸ்தானின் சாலை ஓரத்தில் விட்டு சென்ற திருடர்கள், அதில், மன்னிப்பு கடிதத்தையும் சேர்த்து வைத்து விட்டு சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான்முகநூல்
Published on

டெல்லியிலிருந்து காரை திருடி விட்டு மனம் கேட்காமல்,அதை ராஸ்தானின் சாலை ஓரத்தில் விட்டு சென்ற திருடர்கள், அதில், மன்னிப்பு கடிதத்தையும் சேர்த்து வைத்து விட்டு சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லி பாலாம் காலனியை சேர்ந்த வினய் குமார் என்ற நபர் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி தனது ஸ்கார்பியோ கார் திருடுபோய்விட்டது என்று அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கார் காணாமல் போனது தொடர்பாக எஃப்ஐ ஆர் பதிவு செய்த காவல் துறையினர், அது குறித்து தேடி வந்துள்ளனர்.

இந்தநிலையில்தான், ராஜஸ்தான் பிகானரில் ஸ்கார்பியோ கார் ஒன்று, நம்பர் பிளைட் இல்லாமல் ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட அவ்வழியில் சென்ற மக்கள் அதை சோதனை செய்தபோது, மூன்று காகித குறிப்புகள் காரில் வைக்கப்பட்டிருந்தது.

அதில், காரின் பின்பக்க கண்ணாடியில் இரண்டு காகித குறிப்புகள் வைக்கப்பட்டிருந்தது.. ஒன்றில், ”இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியிலிருந்து திருடப்பட்டது. மன்னிக்கவும்.” என்றும் எழுதப்பட்டிருந்தது.. இரண்டாவதில், வண்டி எண்ணையும் எழுதிய திருடன் “ DL 9 CA Z2937” “ I LOVE MY INDIA" என்றும் தனது கையால் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். மூன்றாவதாக, வைக்கப்பட்டிருந்த காகித குறிப்பில், “ இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது. உடனே போலீஸுக்குச் சொல்லுங்கள்.. அவசரம்.” என்று எழுதப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்
"காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், ஜெய்ப்பூர் பிக்கானர் நெடுஞ்சாலையின் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் குறித்த தகவலையும், உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள். இதன் பிறகு காரை மீட்ட காவல்துறையினர், காரை பயன்படுத்தி ஏதேனும் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com