அமலுக்கு வரும் புதிய விதிமுறை- இந்திய சந்தையை விட்டு வெளியேறும் டீசல் கார்கள் இவைதான்

அமலுக்கு வரும் புதிய விதிமுறை- இந்திய சந்தையை விட்டு வெளியேறும் டீசல் கார்கள் இவைதான்
அமலுக்கு வரும் புதிய விதிமுறை-   இந்திய சந்தையை விட்டு வெளியேறும் டீசல் கார்கள் இவைதான்
Published on

ஆர்டிஇ விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் இந்திய சந்தையை விட்டு குறிப்பிட்ட சில கார் மாடல்கள் வெகு விரைவில் வெளியேற இருக்கின்றன.

இந்தியாவில் டீசல் கார்களுக்கு 'செக்' வைக்கும் நடவடிக்கையாக RDE என சுருக்கமாக அழைக்கப்படும் ரியல் டிரைவிங் எமிஷன்  விதிமுறைகளை அமல்படுத்த இருக்கிறது மத்திய அரசு. இந்த புதிய விதிமுறை வரும் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டம்தான் ஆர்டிஇ.

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு டீசல் கார்கள்தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  ஏராளமான டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டது. இச்சூழலில் ஆர்டிஇ விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் இந்திய சந்தையை விட்டு குறிப்பிட்ட சில கார் மாடல்கள் வெகு விரைவில் வெளியேற இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் உற்பத்தியாளர்களால் நிறுத்தப்படும் டீசல் இஞ்சின் கார்களின் பட்டியல் இங்கே உள்ளன. மேலும் இந்த கார்கள் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

* Honda City Diesel
* Honda City 4th Gen Diesel
* Honda Amaze Diesel
* Hyundai i10 Diesel
* Hyundai Verna Diesel
* Hyundai i20 Diesel
* Nissan Kicks
* Tata Altroz Diesel
* Mahindra Marazzo Diesel
* Mahindra Alturas G4
* Mahindra KUV100
* Skoda Octavia
* Skoda Superb
* Maruti Alto 800
* Renault Kwid 800
* Honda WRV
* Honda Jazz

கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசத்தை குறைக்கும் வகையிலும் ரியல் டிரைவிங் எமிஷன் விதிமுறைகளை அமல்படுத்த இருக்கிறது மத்திய அரசு. அண்மை காலமாக பெட்ரோல் காரைவிட, டீசல் காரின் விலை அதிகமாக இருப்பதால் பெட்ரோல் கார் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் டீசல் கார்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார வாகனங்களின் பயன்பாடு 2030-க்குள் பரவலாக்கப்பட்டால் 37% கார்பன் மாசுபாட்டை குறைக்கலாம் என்றும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com