கடந்த இரண்டு வருடங்களாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான உரிமைகள் பறிக்கப்படும் வகையில் பல்வேறு சட்டங்கள் தாலிபன் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் குறிப்பாக பல பெண் ஆர்வளர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தாலிபான்களின் இந்த நடவடிக்கையை வண்மையாக கண்டித்து வருகின்றது.
இந்தநிலையில், நேற்றோடு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தங்களது ஆட்சி கொடியை நட்டு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதன் காரணமாக தாலிபான்களின் ஆன்மீக பிறப்பிடமான தெற்கு நகரமான காந்தஹாரில், ராணுவ வீரர்கள் கவச வாகனங்களுடன் போஸ் கொடுத்தனர். இளைஞர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் கொடிகளை அசைத்தும், ஆயுதங்களை ஏந்தியவாறும் நகருக்குள் சென்றனர்.
இதுமட்டுமல்லாது தாலிபான் செய்திதொடர்பாளர் முஜாஹித் இதுக்குறித்து வெளியிட்ட நேர்காணல் ஒன்றில் “தாலிபான் சட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய ஷிரியா சட்டத்தின் ஒழுங்குமுறையை பின்பற்றிதான் நடைபெறுகின்றது. ஷிரியாவுக்கு எதிராக செயல்படுவதை எங்களால் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும் “ஏற்கனவே நடைமுறையில் உள்ள பெண்களுக்கு எதிரான எந்த ஒரு கட்டுபாடுகளையும் ரத்து செய்யப் போவதில்லை” என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண் உரிமையை பறிக்கும் வகையில் பல்வேறு சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டனர்.
ஆகஸ்டு 15, 2021 ல் 20 வருடத்திற்குப் பிறகு தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர்.
மார்ச் 2022 -6 ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பதற்கு தடை.
நவம்பர் 2022-பூங்காக்கள், ஜிம்கள் , உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை.
டிசம்பர் 2022-பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை.
ஏப்ரல் 4,2023 - ஐநா சபையில் பணிபுரியும் பெண்களைகளின் வேலைக்கு தடை.
தற்போது-10 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பள்ளி செல்ல தடை
இப்படி 2021 ல் இருந்து 2023 என ஆட்சி பொறுப்பேற்ற காலங்களில் பெண் உரிமை மற்றும் அவர்களின் கல்வி உரிமையை தடைசெய்யும் வகையில் பல சட்டங்கள் நடைமுறைக்கு வந்து பல தரப்பு நாடுகளும் தங்களது கண்டனங்களை இன்றளவும் தெரிவித்துவருகின்றனர்.
- ஜெனிட்டா ரோஸ்லின் S