ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் போல ஸ்மார்ட் கிராமங்கள் திட்டம் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவற்றை எட்டுவதற்கான திட்டங்களை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இதன் கீழ் 2,857 கிராம பஞ்சாயத்துகளை இணைத்து 300 கிராமப்புற மையங்களாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் குடிநீர் குழாய் இணைப்பு, தூய்மைப் பணிகள், கழிவு மேலாண்மை, கிராம சாலைகள், தெரு விளக்குகள், பொதுப்போக்குவரத்து, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.