இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சக்திகாந்த் தாஸ், “நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து விளக்கத்திற்குள் செல்ல விரும்பவில்லை. நெருக்கடிகள் இருக்கிறது. அதேபோல், அதில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சவால்களில் இருந்து மீண்டு வருவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பங்குதாரரும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தொழில்துறை நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாகத்தான் இந்தியாவிலும் அதன் தாக்கம் இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.