கொரோனா மூன்றாவது அலை தற்போது ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள சூழலில் டெல்டா வகை கொரோனாவே பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், வாராந்திர தொற்று கண்டறியும் சராசரியும் மிகவும் குறைந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது அலை குறித்து இப்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை என்றும், ஒரு வேளை அடுத்த ஆண்டு மத்தியில் இல்லையெனில், அடுத்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மூன்றாவது அலையின் தாக்கத்தை நாம் உணரக்கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது அலை ஏற்படும்பட்சத்தில் 30 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதும் மருத்துவ நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. வாராந்திர தொற்று கண்டறியும் சராசரியானது அக்டோபர் 9ஆம் தேதி முதல் 20ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.