திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்தநிலையில் மணமகள் தனக்கு கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும் ஆனந்தபுரம் முதுகுப்பா பகுதியைச் சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்களால் நிச்சயித்தபடி கதிரியில் உள்ள கோயிலில் இன்று காலை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 13 சவரன் நகைகளை மாப்பிள்ளை வீட்டார் கொடுத்துள்ளனர். திருமணத்திற்காக இருவீட்டாரும் கோயிலுக்கு வந்தநிலையில், இரவு நலங்கு சடங்குகள் நடைபெற்றன.
பின்னர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதாகவும், திருமணத்தை நிறுத்துமாறும் குஷ்மா கூறியுள்ளார். அதனைதொடர்ந்து கதிரி காவல்நிலையம் சென்ற குஷ்பா, தனக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடத்துவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பேசித்தீர்த்துகொள்ளுமாறு கூறி கூட்டத்தை கலைத்தனர்.