நிலக்கரி சுரங்கம் அமைக்க நூறு சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
அதேபோல், நிலக்கரி சுரங்கம் அமைக்க நூறு சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும், அரசின் அனுமதி இல்லாமல் ஒப்பந்த அடைப்பையில் உற்பத்தி செய்வதில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டு அனுமதியளித்துள்ளதாக அவர் கூறினார். அதேபோல், டிஜிட்டல் மீடியா துறையிலும் அரசு அனுமதியுடன் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.