ஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு  

ஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு  
ஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு  
Published on

காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள 'காவேரி கூக்குரல்' இயக்கத்துக்கு கர்நாடக மாநில அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகள், விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தலக் காவேரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பெங்களூருவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற பொதுக் கூட்டம் திருபுரவாசினி அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இவ்விழாவில் பேசிய முதல்வர் எடியூரப்பா, ''காவேரி கூக்குரல் என்ற இந்த இயக்கம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆறரை கோடி மக்களை விழிப்படைய செய்துள்ளது. இந்த இயக்கத்துக்கு கர்நாடக மாநில அரசு அனைத்து வழிகளிலும் முழு ஆதரவளிக்கும். முடிந்தளவு அதிக மரக் கன்றுகளை உற்பத்தி செய்து வழங்குமாறு கர்நாடக வனத் துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். 

காவேரி நதிக்கு புத்துயிரூட்டும் உன்னத நோக்கத்திற்காக கர்நாடகாவும் தமிழ்நாடும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com