மூன்று மாதங்களாக ஏசி இயந்திரத்தில் தங்கி இருந்த பாம்பு

மூன்று மாதங்களாக ஏசி இயந்திரத்தில் தங்கி இருந்த பாம்பு
மூன்று மாதங்களாக ஏசி இயந்திரத்தில் தங்கி இருந்த பாம்பு
Published on

புதுச்சேரியில் ஏசி இயந்திரத்திற்குள் பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி தேங்காய்த்திட்டு சாய் ஜீவா சரோஜினி நகரைச் சேர்ந்த ஏழுமலை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது வீட்டு படுக்கையறையில் உள்ள ஏசி இயந்திரத்தை இயக்கும் போதெல்லாம் வித்யாசமான சத்தம் வந்துள்ளது. அதனால், ஏசி பழுதடைந்துவிட்டதோ என நினைத்த ஏழுமலை, அதனை சரிசெய்ய மெக்கானிக்கை அழைத்துள்ளார். அப்போது, தான் ஏசிக்குள் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது.

பாம்பை பிடிப்பதற்காக, வனத்துறையினர் ஏசி இயந்திரத்தை திறக்கும் போதுதான் அதிர்ச்சியே ஏற்பட்டது. ஏனெனில், ஏசிக்குள் 3 பாம்பு தோல்கள் இருந்துள்ளன. அதனால், அந்தப் பாம்பு 2 - 3 மாதங்களாக அங்கு இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஒரு மணி நேர முயற்சிக்கு பின் பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

வீடுகளில் ஏசி பொருத்திய பின், அதற்காக சுவர்களில் ஏற்படுத்தப்பட்ட துளைகளை முறையாக அடைத்தால் மட்டுமே இது போன்ற ஆபத்துகளை தடுக்க முடியும் என்கிறார்கள் ஏசி மெக்கானிக்குகள்.

கோடைக்காலத்தில் பாம்பு போன்ற ஊர்வனங்கள் குளிர்ச்சியான இடங்களை தேடி செல்லும் என்பதால், ஏசி பயன்படுத்துவோர் முன்னெச்சரிக்கையோடு, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறார்கள் வனத்துறையினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com