இதுதான் பாம்புகளுக்கான இந்தியாவின் கிராமம்.. எங்கு இருக்கிறது தெரியுமா?

இதுதான் பாம்புகளுக்கான இந்தியாவின் கிராமம்.. எங்கு இருக்கிறது தெரியுமா?
இதுதான் பாம்புகளுக்கான இந்தியாவின் கிராமம்.. எங்கு இருக்கிறது தெரியுமா?
Published on

இந்தியாவின் மரபுகளும், கலாசாரமும் எப்போதும் எவருக்குமே ஆச்சர்யத்தையும், அதிசயத்தையுமே ஏற்படுத்தும். ஒவ்வொரு மாநிலங்களிலும், நகரங்கள், கிராமங்களிலும் பின்பற்றப்பட்டு வரும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் குறித்து கேள்விப்படும்போது இப்படியெல்லாமா நாட்டில் இருக்கிறதா எனக் கேள்வி எழ வைக்கும்.

அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் பாம்புகளுடன் வாழ்வதை ஒரு மரபாகவே கடைப்பிடித்து வருகிறார்கள்.
சோலாபுர் மாவட்டத்தில் மொஹொல் தாலுகாவில் உள்ளது ஷெட்பல் என்ற கிராமம்.

புனேவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஷெட்பல் கிராமத்தில் 2600 பேர் வசிக்கிறார்கள். பல காலங்களாக பாம்புகளுடனேயே இந்த கிராமத்தினர் வசித்து வருகிறார்கள். அவைகளும் கிராமவாசிகள் ஒருவரைகூட தாக்கியதில்லையாம். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகளுக்கென தனி இடமே ஒதுக்கியிருக்கிறார்கள். புதிதாக வீடு கட்டினால்கூட பாம்புகள் வந்து தங்கிச் செல்வதற்காகவே இடம் ஒதுக்குவார்களாம்.

ASLO READ: 

அந்த இடத்தை தேவஸ்தானம் என்றும், அங்கு பால், முட்டைகளை வைத்து பாம்புகளை வழிபடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நாகபஞ்சமியன்று தவறாமல் நாக வழிபாடு நடத்துகின்றனர். கொடிய விஷமுடைய பாம்புகளை செல்லப்பிராணிகளாக எண்ணி அதனுடன் வாழ்ந்து வருகிறார்கள் ஷெட்பல் கிராமத்தினர்.

ALSO READ: 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவருமே வீடுகளுக்கு வந்து செல்லும் பாம்புகளை கண்டு அஞ்சியதாகவும், தயங்கியதாகவும் சாத்தியமே இல்லை என்று கூறியிருக்கிறார்கள் ஷெட்பல் மக்கள். பள்ளிகளுக்கு செல்லும்போது கூட பாம்புகளை குழந்தைகள் எடுத்துச் செல்வார்களாம்.

ராஜ நாகங்கள் முதல் அனைத்து வகையான பாம்புகளும் ஷெட்பலை சுற்றி வருவதை அவற்றை கிராம மக்கள் வரவேற்று உணவளிப்பதையும் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற கூற்றுக்கும் இந்த கிராமத்துக்கும் சம்மந்தமே இல்லை என்பதையே இந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com