மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை அடைப்பு

மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை அடைப்பு
மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை அடைப்பு
Published on

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் முடிந்து சபரிமலை நடை அடைக்கப்பட்டது.

காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் பந்தள அரச குடும்பத்தின் பிரதிநிதிகள் பங்கேற்க, ஆச்சார சடங்குகள் நடத்தப்பட்டு நடை அடைக்கப்பட்டது. முன்னதாக சபரிமலை ஐயப்பனுக்கு அணிவித்து அழகு பார்த்த பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் பதினெட்டாம் படி வழியே கீழே இறக்கப்பட்டு பந்தள அரண்மனைக்கு நடைபயணமாக திரும்பக் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆச்சாரப் படி, சபரிமலை கோவில் சாவி பந்தள அரச குடும்ப பிரதிநிதியான மூலம் நாள் சங்கர் வர்ம ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 2021 நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடந்தது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். தினசரி 10 ஆயிரம் என அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை 60,000 ஆக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து சபரிமலையில் தினசரி சராசரியாக 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்தது.

டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடந்தது. இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மகரஜோதி தரிசனம் முடிந்த பின்பும் தற்போது வரை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இனி, கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 17ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கும் என தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com