எல்லைப் பகுதியில், சீனா, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால், தண்ணீரின் நிறம் கருப்பாக மாறியதாகவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் நதிக் கரையோரத்தில் இருக்கும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். செத்து மிதக்கும் மீன்களை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர் கருப்பாக மாறியதற்கான காரணத்தை உடனடியாக அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, SIANG ஆற்றின் நீர் கருப்பாக மாறிய போதும், சீனாவின் சதி என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.