ஜனாதிபதி மகள் விமான பணிப்பெண் பொறுப்பிலிருந்து மாற்றம்

ஜனாதிபதி மகள் விமான பணிப்பெண் பொறுப்பிலிருந்து மாற்றம்
ஜனாதிபதி மகள் விமான பணிப்பெண் பொறுப்பிலிருந்து மாற்றம்
Published on

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள், விமானப் பணிப்பெண் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, விமான நிலையப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி. இவர், ஏர் இந்தியாவின் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக நீண்ட தூரம் செல்லும் போயிங் 787 மற்றும் போயிங் 777 விமானங்களில் பணிப்பெண்ணாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர், விமானப் பணிப்பெண் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விமான நிலையப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் குடியரசுத் தலைவரின் மகள் என்பதால் ஸ்வாதிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டியுள்ளது. இதனால் மற்ற பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com