நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா தடுப்பு ஏற்பாடுகளுடன் இன்று தொடங்க உள்ளது.
இன்று தொடங்கி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரை இடைவிடாமல் 18 நாட்களுக்கு நடைபெறும் தொடரில் மொத்தம் 47 மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா, வங்கிகள் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா, பெருந்தொற்று நோய் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இவற்றில் அடங்கும். மாநிலங்களவை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரையும் மக்களவை பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரையும் நடைபெறும்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமைச்சர்கள், எம்பிக்கள், அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட சுமார் 4 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்