இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மசோதா மூன்றில் இரு பங்கு ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது.
முன்னதாக மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் மூன்றில் இருபங்கு ஆதரவுடன் ஓபிசி மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்ச வரம்பை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியதை அடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.