'உலகின் சிறந்த நம்பிக்கை' என பரவும் மோடியின் புகைப்படம் போலியானது - தி நியூயார்க் டைம்ஸ்

'உலகின் சிறந்த நம்பிக்கை' என பரவும் மோடியின் புகைப்படம் போலியானது - தி நியூயார்க் டைம்ஸ்
'உலகின் சிறந்த நம்பிக்கை' என பரவும் மோடியின் புகைப்படம் போலியானது - தி நியூயார்க் டைம்ஸ்
Published on

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன், 'உலகத்தின் சிறந்த இறுதி நம்பிக்கை' என்ற தலைப்பில் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வெளியானதாக பரவும் புகைப்படம் போலியானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. செப்டம்பர் 26 என தேதி குறிப்பிடப்பட்ட அந்த 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. அதற்கு மேல் உள்ள தலைப்பில் 'உலகின் சிறந்த இறுதி நம்பிக்கை' என குறிப்பிடப்பட்டுள்ளது. தலைப்புக்கு கீழே, 'உலகின் மிகவும் பிரியமான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை ஆசீர்வதிக்க இருக்கிறார்' என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெளியிடவில்லை என்று கூறி 'தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை' மறுத்துள்ளது. ''முற்றிலும் புனையப்பட்டது'' எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸின் ட்விட்டர் பக்கத்தில், ''இது முற்றிலும் புனையப்பட்ட புகைப்படம். உண்மையான நம்பகத்தனமான செய்திகள் தேவைப்படும் சூழலில், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களை ஆன்லைனில் மறுபகிர்வு செய்வது அல்லது பரப்புவது நிச்சயமற்ற தன்மையை மட்டுமே உருவாக்கும்'' என்று பதிவிடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையை சரியாக கையாள தவறியதாக பா.ஜ.க அரசு குறித்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது குறித்து பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் அந்த பத்திரிகையை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com