மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல் நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பு.
மத்திய அரசின் தொழில் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழில் சங்கத்தினர் நாடு தழுவிய 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க ஊழியர்கள் உள்பட 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம், போக்குவரத்து தொழிற்சங்கம், மின்வாரிய தொழிற்சங்கம், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், ஆசிரியர்கள் சங்கம் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.