நிபா தாக்குதல் நேரத்தில் வைரலான படம் - இவர்கள் யார் தெரியுமா?

நிபா தாக்குதல் நேரத்தில் வைரலான படம் - இவர்கள் யார் தெரியுமா?
நிபா தாக்குதல் நேரத்தில் வைரலான படம் - இவர்கள் யார் தெரியுமா?
Published on

கேரளாவில் கடந்த மே மாதத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு 17 பலியாகினர். பின்னர் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் ஜூன் முதல் வாரத்துக்குள்ளாக அது கட்டுப்படுத்தப்பட்டது. 

நிபா வைரஸ் தாக்குதல் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், நிறைய மருத்துவமனை ஊழியர்கள் தூய்மை பணியை மேற்கொள்ள தயாராக இல்லை. ஏனெனில் அவர்கள் மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, நர்ஸ் உமா என்பவர் மரணமடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இவற்றையெல்லாம் கடந்து அந்த நேரத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் நேர்மையாக நிறைய ஊழியர்கள் தங்களது பணியை செய்தார்கள். அதுபோன்ற நேர்மையான ஊழியர்களால் தான் நிபா வைரஸ் என்னும் நோய் கொல்லியை கேரளாவால் வென்றெடுக்க முடிந்தது. 

அந்த நேரத்தில் முழுமையான பாதுகாப்புகளுடன் மருத்துவமனை ஊழியர்கள் கழிவுகளை அகற்றும் படங்கள் வெளியானது. குறிப்பாக இரண்டு ஊழியர்கள் கழிவுகளை அகற்றும் படம் வைரலானது. 

இதனிடையே, கேரளாவில் நிபா வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் அதனை வென்ற நிகழ்வுகளின் அடிப்படையில் வைரஸ் என்ற படம் உருவாகி வருகிறது. அந்த படம் தொடர்பான போஸ்டர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. ஆஷிக் அபு இயக்கத்தில் தயாராகி வரும் அந்த படத்தின் போஸ்டரில் இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் கழிவுகளை அகற்றும் படம் இருந்தது. 

இந்நிலையில், அந்த படத்தில் இருப்பவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் இருப்பவர்கள் பெயர் சசிதரன் மற்றும் ராஜீஸ். இருவரும் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிபா தனிப்பிரிவு வார்டில் கழிவுகளை அகற்றும் ஊழியர்களாக தற்காலிகமாக பணியாற்றினார்கள். நிறைய பேர் பயப்பட்ட நேரத்தில், சசிதரன் மற்றும் ராஜீஸ் இருவரும் தங்களது பணியை மிகவும் நேர்மையாக செய்தார்கள். 

நிபா வைரஸ் தாக்கிய நேரத்தில் நீங்கள் எப்படி கழிவுகளை அகற்றும் பணிக்கு சென்றீர்கள் என்ற கேள்விக்கு ராஜீஸ் அளித்த பதில் நம்மை ஒரு நிமிடம் கலங்க வைத்துவிடும். “ஒருவேளை நிபா வைரஸ் தாக்கத்தால் தான் இறந்துவிட்டால், அதனால் அரசு கொடுக்கும் நிவாரணத் தொகையை கொண்டு என்னுடைய குடும்பம் துயரங்களில் இருந்து விடுபட்டுவிடும் என நினத்தேன்” என்றார் ராஜீஸ். நிபா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ராஜீஸ் மேல் வாந்தி எடுத்ததால் அவர் நிச்சயம் இறந்துவிடுவார் என நினைத்தார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக ராஜீஸ்க்கு நோய் பாதிப்பு எதுவும் வரவில்லை.

சசிதரன் படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளார். மற்றொரு தற்காலிக ஊழியரும் நிபா வைரஸ் தாக்கிய நேரத்தில் படபிடிப்பு தளங்களில் இருந்துள்ளார்கள். எமர்ஜென்ஸியாக சூழலை புரிந்து கொண்டு கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கடமையை ஆற்றியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com