10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முறையாக கணக்கிடப்படவில்லை எனக் கூறி தன்பாத் மாவட்டத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்பாத் ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மாதோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில் அவரை முற்றுகையிட மாணவிகள் முயன்றதை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவிகளை கலைத்தனர்.