உத்தரபிரதேசத்தில் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பட்டியலினப் பெண்ணின் குடும்பத்தினரை பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சந்திக்க அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதி.
தற்போது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை வளையத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை யாருமே சந்திக்க கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார் உமா பாரதி.
“எனக்கு தெரிந்து சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாரையும் சந்திக்க அனுமதி இல்லை என சொல்வது எந்த சட்டத்திலும் இல்லை. அதுமட்டுமல்லாது போலீசார் இப்படி சொல்வது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
நீங்கள் மக்களுக்காக நல்லாட்சி கொடுத்து வருகிறீர்கள். அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சந்திக்க அனுமதிக்க வேண்டும்” என ட்விட்டரில் சொல்லியுள்ளார்.
தற்போது உமா பாரதி ரிஷிகேஷ் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்.