உலகப் போரை விட கொரோனாவுக்கு எதிரான போராட்டமே பெரியது - கொரோனாவை வென்ற 99 வயது வீரர்

உலகப் போரை விட கொரோனாவுக்கு எதிரான போராட்டமே பெரியது - கொரோனாவை வென்ற 99 வயது வீரர்
உலகப் போரை விட கொரோனாவுக்கு எதிரான போராட்டமே பெரியது - கொரோனாவை வென்ற  99 வயது வீரர்
Published on

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற 99 வயது முதியவர், தற்போது கொரோனாவையும் வென்று வீடு திரும்பி நம்பிக்கை அளித்துள்ளார்.

பிரேசிலை சேர்ந்த Ermando Armelino Piveta, இரண்டாம் உலகப்போரின்போது பிரேசிலை பாதுகாக்க கடல்வழியே ரோந்துப் பணியில் ஈடுபட்டவர். இவருக்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல் இரண்டு நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் தொடர்ந்து நிமோனியாவாலும் பாதிக்கப்பட்டார். இருப்பினும் தனது விடா முயற்சியாலும், மருத்துவர்களின் கவனிப்பாலும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். 


இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பிய அவரை மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் பலத்த கைத்தட்டலுடன் வழியனுப்பி வைத்தனர். Piveta வெளியே வரும்போது தனது ராணுவ தொப்பியை அணிந்து கொண்டு உற்சாகமாக வெளியே வந்தார்.

இது குறித்து அவர் கூறும்போது “இரண்டாம் உலகப்போரில் நான் செய்த சண்டையை விட, கொரோனாவுக்கு எதிராக நான் செய்த சண்டையே மிகப் பெரியது. போரின் போது நீங்கள் வாழலாம் அல்லது கொல்லப்படலாம். ஆனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் வாழ்வதற்கு போராட வேண்டும்” என்றார்.

மருத்துவர்கள் கூறும்போது “ கொரோனா சிகிச்சைக்காக வந்த அவருக்கு நிமோனியாவும் வந்து விட்டது. இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அவருக்கு வெண்டிலேட்டர் தேவைப்படவில்லை. காரணம் அவரின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு. அந்த உடல் வாகுவே அவரை கொரோனாவில் இருந்து அவரை மீட்டு விட்டது” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com