ஜெயிலில் சம்பாதித்த பணத்தில் மகளின் ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்த தந்தை

ஜெயிலில் சம்பாதித்த பணத்தில் மகளின் ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்த தந்தை
ஜெயிலில் சம்பாதித்த பணத்தில் மகளின் ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்த தந்தை
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள அம்பிகாபூர் வட்டம் அம்தர்ஹா கிராமத்தை  சேர்ந்தவர் ஆனந்த் நாகேஷியா.

குடும்பத் தகராறு காரணமாக தனது தாய் மாமாவை 2005-இல் கொலை செய்த குற்றத்திற்காக பதினைந்து ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

நன்னடத்தை காரணமாக அவரது தண்டனை காலம் குறைக்கப்பட்டு அண்மையில் சிறைச்சாலையிலிருந்து வெளிவந்த அவர் குடும்பத்தோடு இணைந்தார். 

இருந்தாலும் அவரது மகள் செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் தவிப்பதை கண்டதும், சிறைச்சாலையில் தோட்ட வேலை மற்றும் ஆசாரி வேலை செய்ததன் மூலம் சம்பாதித்த ஊக்க பணத்தைக் கொண்டு மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளார் அவர். 

அவரது மகள் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

"ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தன்னிடம் எந்தவித சாதனமும் இல்லை என எனது மகள் சொன்னதும் செல்போன் வாங்க புறப்பட்டு விட்டேன். அவருக்கு டாக்டராகி இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென ஆசை. அதனால் என்னால் முடிந்ததை அவரது படிப்புக்காக செய்வேன். ஜெயிலில் இருந்த போது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்" என தெரிவித்துள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com