”ஹலோ.. மைக்ரோசாஃப்ட் ஏஜென்ட் பேசுறேன்”- அமெரிக்க பெண்ணிடம் ரூ.3.3 கோடி பணமோசடி; டெல்லி இளைஞர் கைது!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணிடம் 3.3 கோடி பணமோசடி செய்த குற்றத்திற்காக டெல்லியை சேர்ந்த நபரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
லக்ஷய் விஜ்
லக்ஷய் விஜ் முகநூல்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணிடம் 3.3 கோடி பணமோசடி செய்த குற்றத்திற்காக டெல்லியை சேர்ந்த நபரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணுக்கு ஜூலை 4, 2023 அன்று "மைக்ரோசாஃப்ட் ஏஜென்ட்" என்று கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், ”உங்களது வங்கி கணக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது; கிரிப்போ கரன்சிக்கு உங்கள் பணத்தை மாற்றவேண்டும்” என்று அழைத்த நபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இப்பெண்ணின் கணினியில் அங்கீகரிக்கப்படாத கிரிப்டோ கரன்சி கணக்கையும் உருவாக்கி, USD 400,000 ஐ இந்த கிரிப்டோ கரண்சி கணக்கிற்கு மாற்றும்படி, அவரை கட்டாயப்படுத்தியுள்ளார். இப்படி செய்தால் எந்த ஆன்லைன் மோசடியும் நடக்காது என்றும் கூறியுள்ளார். இதனால், அந்த பெண்ணும், தனது பணத்தை கிரிப்டோ கரன்சிக்கு மாற்றவே, பின்னர் இந்த கணக்கை சோதித்து பார்த்தப்போது, அவரது பணம் காணாமல் போனது தெரியவந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறைக்கு இது குறித்து தகவல் கிடைக்கவே, இப்பெண்ணிடம் கிரிப்டோ கரன்சி கணக்கிலிருந்து, பல்வேறு கிரிப்டோ கரன்சி வாலட்களுக்கு மாற்றப்பட்டு, இறுதியில் இந்தியா ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, அமெரிக்க பெண் ரோத்தின் கணக்கிலிருந்து மாற்றப்பட்ட பணம், பிரபுல் குப்தா மற்றும் அவரது தாயார் சரிதா குப்தாவின் கிரிப்டோ வாலட்களுக்கு சென்றுள்ளது. மேலும், இந்தப் பணத்தைப் பெற்று வெவ்வேறு வாலட்களில் டெபாசிட் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதற்குப் பிறகு, கிரிப்டோகரன்சியை விற்று இந்தத் தொகை வெவ்வேறு இந்திய போலி கணக்குகளுக்கு மாற்றி, இறுதியாக இந்திய பணமாக மாற்றியுள்ளனர்.

லக்ஷய் விஜ்
லக்ஷய் விஜ்

ஜீன், 6, 2024 அன்று இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அனைத்து சேகரிக்கப்பட்டது. மேலும், இப்பெண்ணிடம் கிரிப்டோ கரன்சி கணக்கிலிருந்து, பல்வேறு கிரிப்டோ கரன்சி வாலட்களுக்கு சென்ற கணக்கின் உரிமையாளர்கள் தங்களின் வாக்கு மூலங்களை கொடுத்தனர். இதனடிப்படையில் இந்த மோசடியை செய்தது, டெல்லியை சேர்ந்த லக்ஷய் விஜ் என்ற நபர்தான் என்று தெரியவந்துள்ளது.

மேலும், இவர் வாட்ஸ் அப் கணக்குளை உருவாக்கி, அதன் மூலம் மோசடி செய்தார் என்றும் வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடந்து, ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்நபரை போலீசார்,பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002 இன் கீழ், கைது செய்துள்ளனர்.

லக்ஷய் விஜ்
தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்குவங்கம் சட்டப்பேரவையிலும் நீட் எதிர்ப்பு தீர்மானம்!

இதனையடுத்து, ஜூலை 23 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவரை 5 நாட்கள் அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

இவ்வழக்கானது, அமெரிக்க குடிமகனை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட பல நபர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தபோது கண்டெக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com