அழிவின் விளிம்பில் உள்ள இமாலய மலை ஆட்டை கண்டுபிடித்த வனத்துறை!

அழிவின் விளிம்பில் உள்ள இமாலய மலை ஆட்டை கண்டுபிடித்த வனத்துறை!
அழிவின் விளிம்பில் உள்ள இமாலய மலை ஆட்டை கண்டுபிடித்த வனத்துறை!
Published on

அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் சிற்றின விலங்கான ‘இமாலய செரோ’ (மலை ஆடு) இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர்பாலைவனமான ஸ்பிதி பள்ளத்தாக்கில் முதன்முறையாக தென்பட்டுள்ளது. அதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலர் பார்த்துள்ளனர். இந்த தகவலை அறிந்த வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அதை பாதுகாக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அதன் படங்களை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. 

அதற்கு எந்தவித தீங்கும் ஏற்படாத வகையில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் வாழ்விடத்தில் இருந்து வழிமாறி வந்ததே இதற்கு காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செரோ ரூபி  பவா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து வந்திருக்கலாம் என சொல்லியுள்ளார் வனத்துறை பிரிவின் தலைமை வன பாதுகாவலர் அனில் தாக்கூர். மேலும் வன பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமிராவில் இந்த செரோவின் நடமாட்டம் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட இந்த செரோவை பனி காலங்களில் குறைந்த உயரம் கொண்ட மலை பகுதிகளுக்கு இடம் பெயர்வது வழக்கம். அப்போது தான் இதனை பார்க்க முடியும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது இந்த செரோவின் படங்கள் இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதை வனத்துறை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த செரோவை வேட்டையாடவும் வேட்டை தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com