மேற்கு வங்க துப்பாக்கிச்சூடு - வாக்குப்பதிவை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்க துப்பாக்கிச்சூடு - வாக்குப்பதிவை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
மேற்கு வங்க துப்பாக்கிச்சூடு - வாக்குப்பதிவை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
Published on

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்க துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானதையடுத்து, சிதால் குர்ச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி 125 ல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் அளித்த இடைக்கால அறிக்கையின் படி தேர்தல் ஆணையம் இந்த முடிவை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 4ஆவது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.இந்தநிலையில், பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகி சட்டர்ஜியின் கார் மீது உள்ளூர் பொதுமக்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது.

இதைதொடர்ந்து வெடிகுண்டு வீச்சும் அப்பகுதியில் நடைபெற்றது. அப்போது சிலர் சி.ஆர்.பிஎஃப் வீரர்களின் துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த 4 பேரில் ஒருவர் வாக்களிக்க சென்ற இளம் வாக்காளர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com