சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
நீதியரசர் இப்ராகிம் கலிஃபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 8ஆம் தேதி நியமித்தது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் அந்தக் குழுவில் இடம் பெற்றனர்.
இதையடுத்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி 3 பேர் கொண்ட சமசரக் குழு உச்சநீதிமன்றத்தில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், சமரசக்குழு உச்சநீதிமன்றத்தில் இன்று தங்களது அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்துள்ளது. இதன்பின் அயோத்தி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கும். அதன்பின் தினமும் தினப்படி முறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனத் தெரிகிறது.