கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிப்ரவரியில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தொகை முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாத வசூலை விட 7% அதிகம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பிப்ரவரியில் 7 ஆயிரத்து 8 கோடி ரூபாய் வசூலானதாகவும் இது முந்தைய ஆண்டு பிப்ரவரியை விட 9% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் புதுச்சேரி மாநிலத்தில் பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு சதவிகிதம் குறைந்து 158 கோடி ரூபாயாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் பொருளாதார நிலவரத்தை பிரதிபலிக்கும் காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது