பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமத்துவத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பும், கவுஷல்காந்த் மிஸ்ரா என்பவரும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில் இடஒதுக்கீடு சலுகை தருவதற்கு பொருளாதார நிலைமை ஒன்றையே ஒற்றை அளவுகோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதை பொதுப் பிரிவினருக்கு மட்டுமானது என வரம்பு நிர்ணயிக்க முடியாது என்றும் இது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையை மீறுவதாகும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற விதி மீறப்படுவதகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி மக்களவையும், மாநிலங்களவையும் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு வழக்கு தொடரப்பட்டதன் மூலம் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.