உத்தரப் பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் சியோஹாரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட முபாரக்பூர் கிராமத்தில் ஒரு ஆணின் உடல் பகுதி எரிந்த நிலையில் மே 23 அன்று மீட்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த உடல் பங்கஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பங்கஜ் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவரது அண்ணன் அசோக் அளித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகத்தின்பேரில் அசோக்கை கைது செய்து விசாரித்தனர்.
இதையடுத்து தனது தம்பியை கொலை செய்து எரித்ததை அசோக் ஒப்புக் கொண்டுள்ளார். தனது தம்பி பங்கஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவரது நடத்தையால் குடும்பத்தினர் சோர்வடைந்து போய் விட்டதாகவும் அசோக் வாக்குமூலம் அளித்துள்ளார். “மே 22 அன்று, சகோதரர்கள் வீட்டிற்கு வெளியே தகராறு செய்தனர். மறுநாள் அசோக் பங்கஜின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவரது உடலை அருகிலுள்ள வயலுக்கு எடுத்துச் சென்று காய்ந்த இலைகளால் மூடி தீ வைத்துள்ளார் அசோக்” என்று பிஜ்னூர் காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் கூறினார்.