‘ஸ்பூன் வித் லெமன்’ போட்டியில் நிதானம் வித் பொறுமையால் வென்ற சிறுவன்: வைரல் வீடியோ!

‘ஸ்பூன் வித் லெமன்’ போட்டியில் நிதானம் வித் பொறுமையால் வென்ற சிறுவன்: வைரல் வீடியோ!
‘ஸ்பூன் வித் லெமன்’  போட்டியில்  நிதானம் வித் பொறுமையால்  வென்ற சிறுவன்: வைரல் வீடியோ!
Published on

‘ஸ்பூன் வித் லெமன்’ போட்டியில் நிதானம் வித் பொறுமையால் வெற்றி பெற்ற சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பாராட்டுக்களைக் குவித்துவருகிறது.

ஸ்பூன் வித் லெமன் என்பது எலுமிச்சம் பழம் வைக்கப்பட்ட ஸ்பூனை வாயால் கவ்வி இந்தப்பக்கம் கோட்டிலிருந்து எலுமிச்சம் பழம் கீழே விழாமல் நடந்து சென்று அந்தப்பக்கம் கோட்டை தொடவேண்டும். இதுதான், ஸ்பூன் வித் லெமன் விளையாட்டு. பொங்கல், தீபாவளி போன்ற திருவிழாக்களில் கிராமங்களில் வைக்கப்படும் சுவாரஸ்யமான போட்டிகளில் ஒன்றுதான் இது.

வனத்துறை அதிகாரியான சுதா ராமன் ஐ.எஃப்.எஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், ஸ்பூன் வித் லெமன் போட்டி தொடங்குகிறது. போட்டி ஒருங்கிணைப்பாளர் ஸ்டார்ட் என்றதும் சின்னஞ்சிறு போட்டியாளர்களான சிறுவர்கள் ஸ்பூன் வித் லெமனை வாயில் கவ்வியபடி வெற்றிக்கோட்டை நோக்கி கிளம்புகிறார்கள்.  

அத்தனை போட்டியாளர்களும் ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல ஓட்டம் பிடிக்கிறார்கள். ஆனால், வாயில் கவ்வியிருந்த ஸ்பூனிலிருந்து எலுமிச்சம் பழம் கீழே விழுந்து போட்டியில் தோற்றுப்போகிறார்கள்.  ஆனால், அதில் வெள்ளைச் சட்டை அணிந்திருக்கும் ஒரேயொரு  சிறுவன் மட்டும் மிகவும் பொறுமையாக நிதானமாக பின்னால் செல்கிறான்.

முன்னால், சென்றவர்கள் எல்லோருமே தோற்றுப்போக நிதானமான பொறுமையாக சென்ற அச்சிறுவன் வெற்றிக்கோட்டை தொட்டு  வெற்றி அடைகிறான். கைத்தட்டல்களையும் பாராட்டுகளையும் பெறுகிறான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com