சி பிரிவு ஊழியர்களுக்கும் மற்றும் பி பிரிவில் உள்ள நான் கெசட்டட் பிரிவினருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உற்பத்தி சாராத அடிப்படையில் இந்த போனஸ் வழங்கப்படும் என்றும் பணியாளர் நலன் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. அரசின் அறிவிப்புபடி சுமார் ஒரு மாத ஊதியம் போனசாக கிடைக்கும். மத்திய துணை ராணுவப் படையினரும் ஆயுதப் படையினரும் இந்த அறிவிப்பின் கீழ் பலன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.