சிறப்பு பூஜையுடன் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைப்பு

சிறப்பு பூஜையுடன் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைப்பு
சிறப்பு பூஜையுடன் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைப்பு
Published on

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி ஏஹெச்-64 இ ( AH-64e ) ரகத்தைச் சேர்ந்த 8 ஹெலி காப்டர்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்பட்டன.

அமெரிக்காவில் இருந்து அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, தாக்குதல் வகையைச் சேர்ந்த 22 அப்பாச்சி ஏஹெச்-64 இ ரக ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக, சில ஹெலிகாப்டர்கள் ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 8 ஹெலிகாப்டர்கள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. 

விமான நிலையத்துக்கு வந்த அந்த விமானங்களுக்குத் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பொட்டு வைத்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதற்குப் பின், விமானப்படையில் இணைத்துக் கொள் ளப்பட்டது. 

இந்த விழாவில், விமானப்படை தளதிபதி, பி.எஸ்.தனோவா, ஏர் மார்ஷல் நம்பியார் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com