“உங்கள் ஆர்டர் கேன்சல் ஆயிடுச்சு சார்” செல்போனை விற்றுவிட்டு நாடகமாடிய டெலிவரி பாய்!

“உங்கள் ஆர்டர் கேன்சல் ஆயிடுச்சு சார்” செல்போனை விற்றுவிட்டு நாடகமாடிய டெலிவரி பாய்!
“உங்கள் ஆர்டர் கேன்சல் ஆயிடுச்சு சார்” செல்போனை விற்றுவிட்டு நாடகமாடிய டெலிவரி பாய்!
Published on

 டெல்லியில் E காமர்ஸ் நிறுவனமான அமேசானில் டெலிவரி பாயாக பணி செய்யும் 22 வயது இளைஞர் ஒருவர் கஸ்டமர் ஆர்டர் செய்த செல்போனை வேறொருவரிடம் விற்றுவிட்டு, கஸ்டமரிடம் ஆர்டர் கேன்சல் என சொல்லியுள்ளார். 

அதோடு உங்களது பணம் விரைவில் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும் எனவும் அவர் சொல்லியுள்ளார்.

இதனையடுத்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்ட அந்த வாடிக்கையாளர் REFUND தொகை குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு உங்களது போன் ஏற்கனவே டெலிவரி ஆகியுள்ளது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அந்த வாடிக்கையாளருக்கு டெலிவரி பாய் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பணத்திற்காக அந்த செல்போனை வேறொருவரிடம் டெலிவரி பாய் விற்றதை உறுதி செய்தனர். அதோடு இந்த குற்றத்தை செய்தது டெல்லி - கீர்த்தி நகரை சேர்ந்த மனோஜ் என்பதையும் போலீசார் அடையாளம் கணடனர்.

அவரை இந்திய தண்டனை சட்டம் 420இன் கீழ் கைது செய்த போலீசார் அந்த செல்போனையும் மீட்டுள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com