தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பை அதிகரிக்க ஓய்வூதிய முறைப்படுத்தும் அமைப்பான PFRDA திட்டமிட்டுள்ளது.
NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர இப்போதைய அதிகபட்ச வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை 5 ஆண்டுகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 70 வயது வரை ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்த அனுமதிக்கவும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பு அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.