இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையினால் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.
அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மாதிரியான முன்கள வீரர்கள் அவர்களது குடும்பத்தை மறந்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளைக்காமல் சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் தான் மருத்துவர் தீஷா. கர்நாடகாவை சேர்ந்தவர். அவரது பாசப் போராட்டம் ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா டியூட்டியில் இருக்கும் மருத்துவர் தீஷா தனது ஒரு வயது மகனை பார்க்க வந்துள்ளார். இருப்பினும் கொரோனா அச்சத்தினால் அவர் மகனை தூக்கி, அணைத்து கொஞ்சாமல் சில அடிகள் தூரம் நின்ற படியே பார்த்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தீஷா மற்றும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புக்காக பாராட்டுகளை சொல்லி வருகின்றனர்.