"சாட்சியளிக்கத் தயாராக உள்ளேன்" - மலையாள நடிகர் சங்கம் குறித்து புகார் அளித்த நடிகை பேட்டி!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள திரைப்பட நடிகர்கள், நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது இது குறித்து விசாரிக்க கேரள அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை நியமனம் செய்தது.
பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்புதியதலைமுறை
Published on

கேரள மாநில திரைப்பட நடிகர்கள் சங்கம் AMMA. இந்த அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லால் மற்றும் செயலாளராக நடிகர் சித்திக் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள திரைப்பட நடிகர்கள், நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது இது குறித்து விசாரிக்க கேரள அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை நியமனம் செய்தது. இதனை அடுத்து கேரள அரசு தற்பொழுது இந்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், இந்த அறிக்கை வெளிவந்த நிலையில், கேரள திரைப்பட நடிகர் சித்திக், திரைப்பட நடிகரும் கொல்லம் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் உட்பட பல பிரமுகர்கள் மீது பெண் நடிகைகள் கொடுத்த பாலியல் தொல்லை புகார்களை கேரள ஊடகங்கள் வழியாக வெளியிட்டது.

இந்த விவகாரம் கேரள மற்றும் இந்திய முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கேரள மாநில திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர் துணை செயலாளார் எக்சிகியூட்டிவ் உறுப்பினர்கள் என்று 15 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த விவகாரகம் பூதாகரம் எடுத்துவந்த நிலையில், கேரள காவல்துறை பாலியல் புகார் தொடர்பாக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு கேரள திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மீது ஏராளமானோர் பாலியல் புகார்களை அளித்து வருகின்றனர். அதன்படி ஏற்கனவே இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு மற்றும் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ முகேஷ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் மீது பிணையில் வெளியே வர முடியாத பிரிவில் கொச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள தலைமைச் செயலகத்தில் நடந்த படப்பிடிப்பின் போது சக நடிகைக்கு பாலியல் வன்கொடுமை செய்தாக அளித்த புகாரின் பேரில், ஜெயசூர்யா மீதும் பிணையில் வெளியே வர முடியாத பிரிவில் திருவனந்தபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே பாலியல் புகாருக்கு ஆளான இயக்குநர் வி.கே. பிரகாஷ், முன் பிணை கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர்கள் மீது புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண், நம்மிடையே பேசிய பொழுது

”மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றாலே தங்களுடைய விருப்பத்திற்கு இணங்க வேண்டும் என நடிகர்கள் கூறுவார்கள். இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளேன். முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு உள்ளிட்ட 7 பேர் மீது புகார் கொடுத்து இருக்கிறேன். எனது புகார் அடிப்படையில், கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பாலியல் புகாருக்கு ஆதாரம் தேவையில்லை, பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்க வேண்டும்.

கேரள அரசு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும், நீதிமன்றத்தில் சாட்சியளிக்கத் தயாராக உள்ளேன். யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். மலையாள திரைப்பட நடிகர் சங்கம் மாஃபியா போல செயல்பட்டது.

மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தில் மூத்த நடிகர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக தங்களுடைய விருப்பத்திற்கு இணங்குமாறு கூறினர். பாதிக்கப்பட்ட பெண்கள் யாருக்கும் பயப்படாமல் புகார் அளிக்க முன் வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com