மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற இயலாது என்றும் அதேசமயம் சில திருத்தங்கள் செய்ய தயார் என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக மத்திய அரசுடன் நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் டெல்லியில் எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்கள் ஒருபோதும் திரும்பப் பெறப்படமாட்டாது என்றும் வேண்டுமானால் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் மத்திய அரசு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தச் சட்டத்திருத்தங்கள் எங்களுக்குத் தேவையில்லை, அரசானது கூறியதையே மீண்டும் மீண்டும் கூறி வருவதாக விவசாய பிரதிநிதிகள் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் சற்றுநேரத்தில் அரசுடனான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.