கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் முகமது இஸ்மாயில் ஆல்வி என்றும், அவர் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த 'ஜெயிஷ்-ஈ-முகமது' எனும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் ஆல்வி, அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் உறவினர் என்பதும், இருவரும் சேர்ந்து, இந்தியாவில் பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.