'ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன' - உள்துறை அமைச்சகம்

'ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன' - உள்துறை அமைச்சகம்
'ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன' - உள்துறை அமைச்சகம்
Published on

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள உள்துறை இணை அமைசர் நித்யானந்த் ராய், 2020 மற்றும் 2019 ஆண்டுகளில் முறையே 244 மற்றும் 255 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகள் குறைந்திருப்பதாகவும் அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com